அபிநந்தனை தொடர்ந்து பட்டையை கிளப்பும் அஜித்தின் மகன் ஆத்விக் ! ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

அபிநந்தனை தொடர்ந்து பட்டையை கிளப்பும் அஜித்தின் மகன் ஆத்விக் ! ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!


athvik-wear-pilot-dress-while-his-birthday

தமிழ்சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முண்ணனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் திருவிழாவை போல மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும் அஜித் தற்பொழுது பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான  நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 

Ajith

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை சென்னை நட்சத்திர விடுதியில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் இந்த விழாவில் அஜித் மற்றும்  ஷாலினி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் அப்போது ஆத்விக் விமானி உடையணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்

Ajith

மேலும்  கடந்த சில தினங்களாக இந்தியவிமானி அபிநந்தன் மக்கள் மத்தியில் ஹீரோவாக பெருமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அஜித் மகன் ஆத்விக்கும் அவரை போற்றும்வகையில் விமானி உடை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.