அஸ்வின் தூக்கி கொஞ்சும் இந்த பிரபலத்தின் மகள் யாருனு தெரியுதா? அட.. நல்லா கிடுகிடுனு வளர்ந்துட்டாரே!!

அஸ்வின் தூக்கி கொஞ்சும் இந்த பிரபலத்தின் மகள் யாருனு தெரியுதா? அட.. நல்லா கிடுகிடுனு வளர்ந்துட்டாரே!!


aswin-with-master-sandy-daughter-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அட்டகாசமான சமையலால் அனைவரையும் அசத்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளவர் அஸ்வின்.

எப்பொழுதும் அழகிய சிரிப்புடன், பொறுமையாக எதையும் கையாளும் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் தற்போது இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார். இதற்கு முன்பு அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார்.  மேலும் அவர் ஏராளமான விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.

ashwin

மேலும் அவர் தற்போது குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஸ்வின் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மகள் லாலாவை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் லாலா பாப்பாவா இது நல்லா இப்படி வளர்ந்துட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.