சினிமா

தல அஜித் படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளிய அசுரன்! மாஸ் காட்டும் தனுஷ்!

Summary:

Asuran nar konda parvai

கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் அசுரன். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.

மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வெக்கை என்ற நாவலின் கதையை மையமாக வைத்து இயக்குனர் தத்ரூபமாக படமாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் வேற லெவலில் நடித்துள்ளார்.

இதனால் இந்த ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி இதற்கு முன்பு வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை படம் வசூலில் அமெரிக்காவில் செய்த சாதனையை விட தனுஷின் அசுரன் படம் அதிக வசூல் படைத்துள்ளது. 

அதுமட்டுமின்றி இன்னும் அமெரிக்காவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். 


Advertisement