தமிழகம் சினிமா

நடிகை நிலானிக்கும், உதவி இயக்குனருக்கும் இருந்த தொடர்பு!. அவரின் தற்கொலையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!.

Summary:

நடிகை நிலானிக்கும், உதவி இயக்குனருக்கும் இருந்த தொடர்பு!. அவரின் தற்கொலையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!.


திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் லலித்குமார், இவர் உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான நிலானி சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

திடீரென இருதினங்களுக்கு முன் லலித்குமார் (ஞாயிற்றுக் கிழமை) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரின் போன் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

லலித்குமார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரெட்ஜெயன்ட் அலுவலகத்தில் பணியாற்றிய போது, சின்னத்திரை நடிகை நிலானி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.

அப்போது நிலானிக்கும், லலித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலானியை லலித்குமார் காதலித்து வந்துள்ளார். இவர் நிலானியின் குடும்பத்தாருடனும் நெருங்கி பழகியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.  நிலானிக்கும், லலித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிலானி மதுரவாயில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது காவல்துறையினர் இருவரை அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிலானி மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் லலித் தன்னை தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் லலித்குமார்  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் நிலானியை மறக்க முடியாமல், விரக்தியடைந்து  பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


Advertisement