சினிமா

நடிகை ஷகிலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா...! யாரும் அதிகம் பார்த்திராத வைரல் புகைப்படம்...

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் 90களில் பல மொழிகளிலும் ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை ஷகீலாவும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து இவர் மீதான பார்வை முழுவதும் மாறியுள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் , கோமாளிகள் அனைவரும் இவரை அம்மா, மம்மீ என பாசத்துடன் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வருகிறார் என அண்மையில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஷகிலாவின் மகள் குக் வித் கோமாளி அஸ்வினுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement