ஓ இப்போ இவரா...அஷ்வினுடன் ஜோடி போட்டு புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம் இதோ....

ஓ இப்போ இவரா...அஷ்வினுடன் ஜோடி போட்டு புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம் இதோ....


ashwin-and-losliyaa-music

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.

இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சில நாட்களிலேயே  இவரின் குழந்தை போன்ற  சிரிப்பு மற்றும் செயலால் ரசிகர்களின் மனதை வென்று இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. மேலும் சக  போட்டியாளரான  கவினுடன் காதல்  வயப்பட்டு  பல  விமர்சனங்களை  சந்தித்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு  சினிமாவில் அதிக வாய்ப்புகளும் குவிந்தன. அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப், தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதேபோல் குக் வித் கோமாளி 2 வின் மூலம் பெருமளவில் பிரபலமாகி  ரசிகர்களின் பெரிய  வரவேற்பை  பெற்று வருபவர் அஸ்வின்‌. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் சினிமாவில் பயங்கர  பிஸியாக  உள்ளார். அவர் நடித்த  ஓ  மணப்பெண்ணே திரைப்படம்  ரசிகர்களிடையே  அவரை  மேலும் பிரபலமாபக்கியது.

இந்நிலையில்  லாஸ்லியா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து தற்போது சூப்பர் பேபி என்ற பாடலுக்கு ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளார்களாம். பாடலின் ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ  அந்த புகைப்படம்...