பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளும் உதயம் NH4 பட நடிகை! புகைப்படம் உள்ளே. - TamilSpark
TamilSpark Logo
சினிமா விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளும் உதயம் NH4 பட நடிகை! புகைப்படம் உள்ளே.

தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் NH4 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அந்த படத்தில் இடம்பெற்ற யாரோ இவன் யாரோ இவன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கும் புது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை அஷ்ரிதா பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இன்று மும்பையில் திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விரைவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடர் நடக்கவுள்ளதால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இன்று திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo