BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
புளூ ஸ்டார் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு: விபரம் உள்ளே.!
நடிகர்கள் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, சாந்தனு பாக்யராஜ், இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் புளு ஸ்டார் (Blue Star).
எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில், இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கோவிந்த் வசந்தா இசையில், அழகன் ஒளிப்பதிவில், செல்வா ஆர்.கே எடிட்டிங்கில் படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில், புளூ ஸ்டார் திரைப்படத்தின் டிரைலர், நாளை (10 ஜனவரி 2023) மாலை 06 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஜனவரி 25 அன்று திரையரங்கில் வெளியாகிறது.