தன்னை கடுப்பாக்கியவரை அந்த மாதிரி வார்த்தை கூறி திட்டிய அசோக்செல்வன் " வைரலாகும் பதிவாகும் ரசிகர்கள் அதிர்ச்சி..ashok-selvan-scolding-some-random-person

2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான "சூது ​​கவ்வும்" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதற்கு முன்பு இவரது புகைப்படம் மட்டும் 'பில்லா' படத்தில் சிறுவயது அஜித்தின் முகம் காட்டப்பட்டிருக்கும்.

ashok

அதன்பிறகு இவர் நடித்த தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற படங்களைப் பார்த்து, இவர் நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்று ரசிகர்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "போர்த்தொழில்" படமும் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் குறித்து பலரும் அதிருப்தியைத் தெரிவித்து வரும் நிலையில், அசோக் செல்வனும் தன் ட்விட்டர் பக்கத்தில் "கடைசி விவசாயிக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி, ஆனால் ஜெய் பீமைக் கண்டுகொள்ளாதது ஏன்.?" என்று கேட்டிருந்தார்.

ashok

அதற்கு போடி வெண்ணா என்ற பக்கத்தில் இருந்து அசோக் செல்வன் பதிவிற்கு " நீ நல்லா இருக்க, நல்லா நடிக்கிற, அதோட நிப்பாட்டு" என்று கமெண்ட் போடப்பட்டது. அதைக் கண்டு கடுப்பானவர், "போடி வெண்ணா" என்ற அப்பக்கத்தின் பெயரையே தன் பதிலாக அளித்திருந்தார்.