பெண்களுடன் அப்படி இருந்ததற்கு காரணம் இதுதாங்க.. சிறுவயதிலிருந்தே அப்படித்தான் - வீடியோ மூலம் உண்மையை உடைத்த அசல் கோளாறு..!!

பெண்களுடன் அப்படி இருந்ததற்கு காரணம் இதுதாங்க.. சிறுவயதிலிருந்தே அப்படித்தான் - வீடியோ மூலம் உண்மையை உடைத்த அசல் கோளாறு..!!


asal-kolaru-viral-video

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6-வது சீசனில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அசல்கோளாறு, இலங்கை செய்திவாசிப்பாளர் ஜனனி, நடிகைகள் ஆயிஷா, மைனா நந்தினி, ரக்ஷிதா உட்பட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

asal kolaru

இதில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து அசல்கோளாறு, ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் மட்டும் வெளியேறிவிட்ட நிலையில், பிற போட்டியாளர்கள் வெற்றிகோப்பையை தட்டி பார்க்க முயற்சித்து வருகின்றனர். மேலும், அசல் நடிகை நிவாஸினியுடன் நெருங்கி பழகியது என்று பல்வேறு சர்ச்சை குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அசல் அதற்கு விளக்கமளித்துளார். 

அதில், "தனது உறவினரின் வீட்டில் இருப்பது போன்று தான் அங்கும் இருந்தேன். நான் எப்போதும் அப்படித்தான் இருப்பேன். அது அங்கிருந்தவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. வெளியே அது மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் எனது குணத்தை மாற்றிக் கொள்கிறேன்" என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி நிர்வாகமே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.