மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
சட்டையையும் விட்டுவைக்கல.. வெளியேறிய அசல்கோளாறால் அழுது புலம்பும் நிவாஷினி.. தாங்கமுடியவில்லை, தூங்கமுடியவில்லை என கதறல்..!!
பிக்பாஸ் சீசன் 6-ல் இளம் பாடகராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றவர் அசல் கோளாறு என்ற வசந்தகுமார். இவர் "ஜோர்த்தால" பாடலை பாடி மிகப்பெரிய பிரபலமான நிலையில், அதனை தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்திற்கு நுழைந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்வதாக மக்களுக்கு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 21 நாட்கள் வீட்டிலிருந்த அசல் கோளாறு விளையாட்டில் கவனம் செலுத்தாமல், பெண்களின் மீது கவனம் செலுத்தியதாகவும் அவர்களிடம் செல்ல சேட்டை என்று அக்கிரமம் உயர்ந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அவருடன் நெருங்கி இருந்தவர் நிவாஷினி. அசல் கோளாறு வீட்டிலிருந்து வெளியேறிய சமயத்தில் அவரால் தாங்க முடியவில்லை என்றும், தன்னால் அவரை காணாமல் தூங்க முடியவில்லை என்றும் அழுது புலம்புகிறார். அத்துடன் அசலின் ஞாபகமாக அவரது சட்டையை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.