என்னப்பா இதெல்லாம்.! குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோலார்.! வைரலாகும் வீடியோவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

என்னப்பா இதெல்லாம்.! குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோலார்.! வைரலாகும் வீடியோவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!



asal-kolar-misbehaviour-with-queency

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டவர்கள் அசல் கோலார்.  இவர் நேற்றைய எபிசோடில் சக போட்டியாளரான குவின்ஸியிடம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களை ஆவேசப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே அசல் கோலார் குவின்ஸி பின்னாடியே சுற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று குவின்ஸி விக்ரமனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அசல் அவரது கையை தடவிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான குவின்ஸி அவரது கையை தட்டிவிட்டுள்ளார். ஆனாலும் அசல் தொடர்ந்து குவின்ஸியின் கையை தொடர்ந்து தடவி கொண்டே இருந்துள்ளார்.

மேலும் இவர் ஆயிஷாவிடமும் இவ்வாறு அத்துமீறி நடந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பார்வையாளர்கள் பலரும் அவரை விளாசி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கேட்டு வருகின்றனர்.