என்னது.. ரஜினிமுருகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த இளம் நடிகரா?? அட இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே!

என்னது.. ரஜினிமுருகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த இளம் நடிகரா?? அட இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே!


arya-miss-the-chance-to-act-in-rajini-murugan-movie

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று ரஜினிமுருகன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம்ம ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரஜினிமுருகன் திரைப்படம், அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி சில கடன் பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. பின்னர் ஒருவழியாக கடன் பிரச்சனைகளை சரிசெய்து 2015ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட்டனர். இப்படம் செம ஹிட்டாகி வசூலை வாரி இறைத்தது.

sivakarthickeyan

இயக்குனர் பொன்ராம் முதலில் ரஜினிமுருகன் படத்தின் கதையை இளம் நடிகர் ஆர்யாவிடமே கூறி நடிக்க கேட்டாராம். ஆனால் ஆர்யா, கதையில் பெருசாக ஒண்ணும் இல்லையே என்று கூறி அப்படத்தை நிராகரித்து விட்டாராம். பின்னரே சிவகார்த்திகேயன் நடித்தாராம். இதனை இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.