சினிமா

முதலில் விஷால்! அடுத்து இவருக்கா? புஷ்பா படத்தில் வில்லனாகும் பிரபல சாக்லேட்பாய் ஹீரோ! செம கெத்துதான்!

Summary:

நடிகர் ஆர்யா, அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சாக்லேட் ஹீரோவாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளம்பெண்களின் கனவுகண்ணனாக, முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு  சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சமீபகாலமாக கதாநாயகர்கள் பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்யாவும் வில்லன் ரோலில் நடிக்க  தொடங்கி உள்ளார். அதனை தொடர்ந்து ஆர்யா ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் விஷால் ஹீரோவாக நடிக்கும் எனிமி படத்தில் அவருக்கு  வில்லனாக நடிக்கவுள்ளார்.  மேலும் இப்படத்தில் விஷாலுக்கு இணையாக ஆர்யாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Hero Leaves Phone No For Marriage

இதனை தொடர்ந்து ஆர்யா அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் உருவாக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாகவும், தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில் மற்றொரு வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement