சினிமா

வித்தியாசமான கேரக்டரில் கெத்து காட்டும் அருண்விஜய்.! ஆனாலும் மிகவும் வருத்தத்துடன் வெளியிட்ட வீடியோ!! ஏன் தெரியுமா?

Summary:

arunvijay boxer firstlook poster leaked

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் விஜய். பல வருடங்கள் சினிமாவில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார்.

 அதனைத் தொடர்ந்து அவர் செக்கச் சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்பொழுது அருண் விஜய் புதுமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பாக்ஸராக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று திரைப்படத்தில் புகழடைந்த ரித்திகா சிங் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று திடீரென லீக்கானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் இது குறித்து வீடியோவை வெளியிட்டுள்ளார் . பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பெரிய பில்டப் செய்து வெளியிடலாம் என இருந்தேன். ஆனால் நேற்று லீக் ஆகி விட்டது. அதனால் படக்குழு அதனை அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது என வருத்தத்துடன் பேசியுள்ளார். மேலும் வித்தியாசமான அருண்விஜய்யின் போஸ்டரை கண்ட ரசிகர்கள் அனைவரும் அருண் விஜய்யை பாராட்டி வருகின்றனர்.  


Advertisement