சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்.. அவரே கொடுத்த அப்டேட்!

சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்.. அவரே கொடுத்த அப்டேட்!



arunraja-kamaraj-direct-vishnu-vishal

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தது மூலம் ரசிகர்களுடைய மிகவும் பிரபலமானார்.

arunraja kamaraj

அதன் பின்னர் இவர் நடித்த ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இவர் இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த உள்ளார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லேபிள் வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.