சினிமா

சூப்பர்.. தன் படக்குழுவினருக்காக நடிகர் அருண் விஜய் செய்த அசத்தலான காரியம்! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

சூப்பர்.. தன் படக்குழுவினருக்காக நடிகர் அருண்விஜய் செய்த அசத்தலான காரியம்! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண்விஜய். ஹீரோவாக அறிமுகமான இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முன்னணி நடிகராக வலம்வர முடியாமல் போராடினார். அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் அருண் விஜய் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இந்நிலையில் அவர் தற்போது முன்னணி ஹீரோவாக படங்களில் கலக்கிவருகிறார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.

அருண் விஜய் தற்போது யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் படப்பிடிப்பில் தனது படக்குழுவினருக்காக உணவு சமைத்து பரிமாறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆகட்டிவாக இருக்கும் அவர் அந்த புகைப்படத்தையும், உணவளிக்க வீடு கொடுத்தவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர்கள் தங்களது அன்பில் பணக்காரர்களாகவும், பெருந்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement