
arrest warrant for gnanavel raja
ஸ்டூடியோ கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கஜினிகாந்த், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். மேலும் கும்கி, சூது கவ்வும், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஞானவேல்ராஜா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Advertisement
Advertisement