சினிமா

பிக்பாஸ் வீட்டையே ரணகளமாக்கி வந்த சுரேஷை, வந்த முதல்நாளே சும்மா வச்சு செய்த புதிய போட்டியாளர்! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பல பிரபலங்களும், சில புதுமுகங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள்  வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இவர் சென்ற முதல் நாளே பிக்பாஸ்  வீட்டிற்குள் அனைவருக்கும் ஆட்டம் காட்டிவந்த சுரேஷை கிண்டல் செய்து ஆரத்தி எடுத்து, வச்சு செய்துள்ளார். இந்நிலையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சுரேஷ் கோபமாக அங்கிருந்து செல்கிறார்.இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது


Advertisement