விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொகுப்பாளினி!! யார்னு தெரியுமா? அதுவும் எந்த நிகழ்ச்சிக்கு பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!

விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொகுப்பாளினி!! யார்னு தெரியுமா? அதுவும் எந்த நிகழ்ச்சிக்கு பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!


archana again became vj in vijay tv show

ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. அதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக கொடிகட்டி பறந்தார்.மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

ஆனால் நாளடைவில் ஒரு சில காரணங்களால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். ஆனாலும் பலர் அவரை இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்தனர்.

      vijay tv

இந்த நிலையில் அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளினியாக அவதாரம் எடுக்கவுள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாகவிருக்கும் காதலா காதலா என்ற புதிய காதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.