சினிமா

தொகுப்பாளினி அர்ச்சனா மகளுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! இந்த முன்னணி ஹுரோவின் படத்தில் நடிக்கிறாரா!

Summary:

Archana

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் இடைவெளியில் இருந்த அர்ச்சனா மீண்டும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

தற்போது அத்தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் மூத்த மகள் சாராவுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து கோலமாவு கோகிலா பட புகழ் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் சாரா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இதனை பற்றிய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா இவ்வாறு பதிவிட்டுள்ளார். நன்றி நெல்சன் திலிப் குமார், சாராவை எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பதற்கு என்றும், ஒரு அன்பான இயக்குனர் தான் அழகான அறிமுகத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement