அரசியலில் எந்த பிரபலத்திற்கு உங்கள் ஆதரவு! ஓபனாக கூறிய நடிகர் அரவிந்த் சாமி!

அரசியலில் எந்த பிரபலத்திற்கு உங்கள் ஆதரவு! ஓபனாக கூறிய நடிகர் அரவிந்த் சாமி!



aravind-samy-open-talk

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி - மம்மூட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தளபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அரவிந்த் சாமி. தளபதி படத்தை அடுத்து இவர் நடித்த ரோஜா திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.

அதனை அடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தலைவி என்ற தலைப்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது.

aravind samy

இந்த படத்தில் எம்.ஜி. ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் அரவிந்த் சாமியிடம் ரஜினி, கமல், விஜய் இவர்கள் அரசியலில் நின்றால் யாருக்கு உங்களின் ஆதரவு என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், இவர்கள் எனக்கு பிடித்தவர்கள் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டு போட மாட்டேன். அவர்கள் செய்து காட்டுவேன் என்று கூறும் விஷயங்கள், அதை செய்து முடிக்கும் திறன் உடையவர்களா என்பதையெல்லாம் யோசித்து தான் ஆதரவு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.