பிக்பாஸ் ஆரவ்வா இது... வாவ்..செமயா இப்படி மாறிட்டாரே... தீயாக பரவும் புகைப்படம்.!Arav latest photo shoot viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆரவ். அந்த சீசனில் இறுதி வரை சென்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் பெற்றார். பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து ஆரவ்வுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

ஆரவ், சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும், பிறகு ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. சில காலம் ஆரவ் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது.

arav

இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்த ராஹி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

arav

தற்போது மீண்டும் படவாய்ப்புக்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் கட்டுகள் தெரிய போட்டோ ஹூட் நடத்தியுள்ளார்‌. தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

arav