சினிமா

அவமானத்திற்கு பயந்து அறந்தாங்கி நிஷா மறைத்து வைத்திருந்த ரகசியம்!! அம்பலமான ஷாக் வீடியோ!!

Summary:

aranthanki nisha video viral

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அதேபோல அசத்தலாக காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா. இவர் பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். 

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

மேலும் இவர் அண்மையில் பிரதமர் மோடி, மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறித்தும் நிஷாவும், பழனியும் மோசமான விமர்சனங்களால் சர்ச்சையை கிளப்பி, பின்னர் மன்னிப்பும் கேட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அறந்தாங்கி நிஷாவின் வீடியோ ஒன்று  பெருமளவில் வைரலாகி வருகிறது.

அதில் விஜே மணிமேகலை மற்றும் நிஷா இருவரும் கடற்கரை அருகில் நின்று நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது இருவரும் அருகில் இருந்த  டேபிள் ஒன்றின் மீது ஏறி ஆடியுள்ளனர். அப்பொழுது  நிஷா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வீடியோவை  அவமானத்திற்கு பயந்து யாருக்கும் தெரியக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த வீடியோ இப்பொழுது உங்களுக்காக என கூறி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


Advertisement