சினிமா

7 மாத கர்ப்பிணி செய்யும் காரியமா இது.! கண்டித்த ரசிகர்களுக்கு அறந்தாங்கி நிஷா கொடுத்த பதிலடியை பார்த்தீர்களா!!

Summary:

Aranthangi nisha talk about her pregnancy

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பேசிவந்த அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 

 அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் காமெடி நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோகளிலும் கலந்து வருகிறார். மேலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். ஆனாலும் அவர் களைப்படையாமல் தனது வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 


 இந்நிலையில் இது குறித்து பேசுகையில், நான் துபாய்க்கு சென்றபோது என்னை ஏர்போர்ட்டில் பார்த்த பலரும் ஏன் இந்த சமயத்தில் டிராவல் பண்றீங்க,  ஓய்வெடுக்க வேண்டியது தானே என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கினர். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நான் மிகவும் தைரியமாக உள்ளேன்.

வயிற்றிலிருக்கும் என் குழந்தையும் என்னை மாதிரி தைரியமாக இருக்கும். இப்பொழுதே நான் எனது குழந்தைக்கு தன்னம்பிக்கையை கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.மேலும் இந்த இடத்திற்கு வர நான்  மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். இந்நிலையில் தற்போது ஓய்வு எடுத்தால் இவ்வளவு நாள் ஓடி உழைத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார். 

 


Advertisement