ப்பா.. அறந்தாங்கி நிஷா பொண்ணா இது.! அச்சு அசல் அம்மாவை போலவே ஜொலிக்கும் வீடியோ காட்சி.! வியப்பில் ரசிகர்கள்

ப்பா.. அறந்தாங்கி நிஷா பொண்ணா இது.! அச்சு அசல் அம்மாவை போலவே ஜொலிக்கும் வீடியோ காட்சி.! வியப்பில் ரசிகர்கள்


aranthangi nisha shared his daughter video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி இவரை புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. மேடையில் பிறரை கிண்டல் செய்து இவர் செய்யும் காமெடி, வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இதனை தொடர்ந்து நிஷா சினிமாவிலும் களமிறங்கி சில படங்களில் காமெடியில் அசத்தியுள்ளார். பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையால் அனைவரையும் அசர வைத்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளினி அறந்தாங்கி நிஷா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரின் மகளுடன் ஓரே மாதிரியாக ஆடை அணிந்து போட்டோ சூட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், அறந்தாங்கி நிஷாவின் குழந்தை வளர்ந்து விட்டதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.