தமிழகம் சினிமா

எப்படி இருந்த அறந்தாங்கி நிஷா எப்படி ஆகிட்டாங்க! ஷாக் ஆன ரசிகர்கள்!

Summary:

aranthangi nisha new get up


விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். இதுபோன்ற பல்வேறு பிரபலங்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி நிஷா.

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.  

தற்போது அறந்தாங்கி நிஷாவும் அவரின் கணவர் ரியாஸும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி இறுதி சுற்றை எட்டிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டேரி போல கெட்டப்பில் வந்து அசத்தினார்.


 


Advertisement