ப்பா..கொழுக் மொழுக்குனு இருந்த நிஷா அக்காதானா இது! இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

ப்பா..கொழுக் மொழுக்குனு இருந்த நிஷா அக்காதானா இது! இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!


aranthangi-nisha-latest-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. இந்த நிகழ்ச்சி அவரை புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. மேடையில் இவர் செய்யும் பிறரை நக்கல் செய்து இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமாவிலும் களமிறங்கி சில படங்களில் காமெடியில் அசத்தியுள்ளார். பின்னர் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நாளடைவில் அவர் விமர்சனங்களையும் சந்திக்க நேரிட்டது.

சினிமா சின்னத்திரை என பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோ நடைபெற உள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளரான அறந்தாங்கி நிஷா கலந்துகொள்கிறார். 

 இந்தநிலையில் அதன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள், வாவ்..உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறிவிட்டீர்களே! எப்படி அக்கா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.