சினிமா

மேடையில் கண்கலங்கிய அறந்தாங்கி நிஷா! ஆறுதல் கூறிய கோபிநாத்! வீடியோ!

Summary:

Aranthangi nisha cries at vijay tv set

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரைப்போல விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பேரும், புகழும் பெற்றுள்ளார் அறந்தாங்கி நிஷா.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவருடன் கலந்துகொண்டுள்ளார். பலவிதமான டாஸ்க்குகள் உள்ள இந்த நிகழ்ச்சியில் நிஷாவுக்கு ஈடுகொடுத்து தன்னால் பங்கேற்க முடியவில்லை. தன்னால் நிஷாவுக்கு அவமானம் நேரவேண்டாம் என்று கூறியுள்ளார் நிஷாவின் கணவர்.

பின்னர் என் கணவரிடம் பலர் ஏன் இந்த கருப்பான பெண்ணை கல்யாணம் செய்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள். ஆனால் அவர் அதற்காக வருத்தப்பட்டதில்லை என்றும் பெருமையாக அழுதுகொண்டே கூறினார்.

இதை கண்ட கோபிநாத் கருப்பு தான் உங்க அழகு வருத்தப்படாதீங்க என்று ஆறுதல்படுத்தினார். 


Advertisement