சினிமா

மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா! இதான் காரணமா?

Summary:

Arandhanki nisha receive best female award

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். இதுபோன்ற பல்வேறு பிரபலங்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி நிஷா.

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது ராமர் வீடு மற்றும் Mr & Mrs சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகினார் நிஷா.

இந்நிலையில் இந்தவருடம் விஜய் தொலைக்காட்சி வழங்கிய விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவிற்கு சிறந்த பெண்ணிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்துள்ளார் அறந்தாங்கி நிஷா.


Advertisement