சினிமா

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவை அவரது மகன் இப்படித்தான் அழைப்பாராம்! நிஷா கூறிய அதிர்ச்சி தகவல்!

Summary:

Arandhangi nisha at vijay tv mr and mrs chinathirai show

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவருடன் கலந்துகொண்டுள்ளார் நிஷா. அந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் குடும்ப சுற்று நடைபெறுகிறது. அதாவது, போட்டியில் இருக்கும் பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்க்கு வருகை தந்துள்ளனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் மாமனார், மாமியார் என அவர்களது குடும்பமும் பங்கேற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா, அவரது தாய் பற்றி பேசினார். தான் இவ்வளவு தைரியமாக இருப்பதற்கும், பேசுவதற்கும் என் அம்மாதான் காரணம் என கூறிய நிஷா மேலும் ஒரு ரகசியத்தை கூறியுள்ளார். நிஷா மகன் பிறந்து 8 மாதம் இருக்கையில் நிஷா பட்டிமன்றங்களில் பேசுவதற்காக சென்றுவிடுவாராம். 

அந்த நேரத்தில் குழந்தையை நிஷாவின் தாய்தான் பார்த்துக்கொள்வாராம். 10 மாத குழந்தையில்  இருந்து இன்று 8 வயதாகும் வரை நிஷாவின் தாய்தான் பார்த்துக்கொள்கிறாராம். மேலும், நிஷாவின் மகன் நிஷாவை நிஷா என்று பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாராம். அதேபோல, நிஷாவின் அம்மாவைதான் நிஷா மகன் அம்மா என்று அழைப்பானாம்.


Advertisement