சினிமா

சொந்த குடும்ப உறுப்பினர்களை கூட விட்டுவைக்காத விஜய் டிவி நிஷா! நீங்களே பாருங்க!

Summary:

Arandhagi nisha with family in vijay tv

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பேரும், புகழும் பெற்றுள்ளார் அறந்தாங்கி நிஷா.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவருடன் கலந்துகொண்டுள்ளார் நிஷா. அந்த நிகழ்ச்சியில் இந்தவாரம் குடும்ப சுற்று நடைபெறுகிறது. அதாவது, போட்டியில் இருக்கும் பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்க்கு வருகை தந்துள்ளனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் மாமனார், மாமியார் என அவர்களது குடும்பமும் பங்கேற்கிறது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் தனது மாமனாரை எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார் அறந்தாங்கி நிஷா. அவரை அறிமுகம் செய்யும்போது இவர்தான் ஏன் கணவர் தூக்குதுறையை பெற்ற டிப்பன் கேரியர் என்று கிண்டலாக கூறினார். மேலும் அவரது மாமியார் கை உடைந்த நிலையில் அவரையும் கலாய்த்துள்ளார் நிஷா. இப்படி குடும்ப உறுப்பினர்களைக் கூட விட்டுவைக்காமல் கலைத்துள்ளார் நிஷா.அந்த வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement