உங்கள ரொம்ப மிஸ் செய்கிறோம்.! பிரபல காமெடி லெஜெண்டின் வீடியோவை பகிர்ந்து இசைபுயல் உருக்கம்!!ar-rahman-shares-vivek-comedy-video

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்து பிரபலமாக இருந்தவர் விவேக். அவர் சமூக சீர்திருத்தக் கருத்துகளை தனது நகைச்சுவையின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் பேரிடியை கொடுத்தது. மேலும் இன்று வரை அவரது மறைவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நடிகர் விவேக்கின் காமெடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, காமெடி லெஜெண்ட் விவேக் அவர்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம். திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.