இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களுக்கு இன்று கடைசி நாள்.! வெளியான அறிவிப்பு..

இசை நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களுக்கு இன்று கடைசி நாள்.! வெளியான அறிவிப்பு..


Ar rahman music concert

சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி "மறக்குமா நெஞ்சம்?" என்ற பெயரில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால், ரசிகர்கள் நிறைய பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் குற்றம் சாட்டியிருந்தனர்.

rahman

மொத்தம் 20000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வாங்கிய இடத்தில, 40000க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரசிகர்கள் உள்ளேயும் செல்ல முடியாமல், உள்ளே சென்றவர்களுக்கு வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளான சம்பவம், மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் இந்த பிரச்சனைக்கு தர்மீகப் பொறுப்பேற்று ரசிகர்களின் பணத்தை திரும்ப தருவதாக அறிவித்தார்.

rahman

இந்நிலையில், இதுவரை ஸ்கேன் செய்யப்பட 7000 டிக்கெட்டுகளில் 3000 பேரை மட்டும் பரிசீலித்து, அதில் 1000 பேருக்கு பணம் செலுத்தப்பட்டு, மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் பதிவேற்றம் செய்ய இன்று தான் கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.