கடுப்பாகிய ஏ ஆர் ரகுமான் பார்த்திபனுக்கு அனுப்பிய மெசேஜ்.. அதிர்ந்து போன பார்த்திபன் செய்த செயல்.?

கடுப்பாகிய ஏ ஆர் ரகுமான் பார்த்திபனுக்கு அனுப்பிய மெசேஜ்.. அதிர்ந்து போன பார்த்திபன் செய்த செயல்.?


Ar rahman message to parthiban about his movie

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் பார்த்திபன். இவர் 'புதிய பாதை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இப்படத்திலேயே நடிகராகவும் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

parthiban

இப்படத்திற்குப் பிறகு பார்த்திபனுக்கு பல படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் குவிந்தது. மேலும் இவர் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே போன்ற திரைப்படங்கள் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக பார்த்திபன் நடிப்பின் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று திரைப்படங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த திரைப்படங்களில் பார்த்திபனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்தது.

parthiban

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அனுப்பிய மெசேஜ் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த மெசேஜில் நான் பர்சனல் மற்றும் ப்ரொபஷனல் என வேறு வேலையில் பிசியாக இருக்கிறேன். தற்போது என்னால் உங்கள் ப்ராஜெக்டில் வேலை செய்ய இயலாது. உங்கள் கதையை கேட்பதில் ஆர்வமாக இருக்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.