மன அழுத்தத்திற்குள்ளான ஏ ஆர் ரகுமான்.. சமூக வலைத்தளங்களில் இருந்து விலகல்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!

மன அழுத்தத்திற்குள்ளான ஏ ஆர் ரகுமான்.. சமூக வலைத்தளங்களில் இருந்து விலகல்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!


Ar Rahman maintained his silence in social media

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழில் முதன் முதலில் 'ரோஜா' படத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்தது.

rahman

இதனையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் இசையமைப்பாளராக இருந்தார். இவர் இசையமைத்த பாடல்கள்  மிக பெரும் ஹிட்டாகியது. மேலும் இவர் இசையை ரசிப்பதற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் இருந்து வருகின்றனர்.

இது போன்ற நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள ஈசிஆர்யில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் அதிக அளவு டிக்கெட் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது  மேலும் பலர் பெண்களை பல ஆபாசமாக சீண்டியதாகவும் புகார் எழுந்தது.

rahman

இதற்கு ஏ ஆர் ரகுமான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பதிவிட்டார். இதன் பிறகு தற்போது வரை ஏ ஆர் ரகுமான் தரப்பிலிருந்து வேறு எந்த பதிவும் வரவில்லை. இதனால் ஏ ஆர் ரகுமான் மன அழுத்தத்தில் இருக்கிறாரா சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிவிட்டாரா போன்றவைகள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.