இசைஞானி இளையராஜாவுடன் கொண்டாட்டமாக வரும் ஏ.ஆர் ரகுமான்... வைரல் வீடியோ.!

இசைஞானி இளையராஜாவுடன் கொண்டாட்டமாக வரும் ஏ.ஆர் ரகுமான்... வைரல் வீடியோ.!


AR Rahman Ilayaraja Video Instagram

இசையுலகில் ஜாம்பவானாக இருப்பவர்கள் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இன்று இசைப்புயலாக இருக்கும் ஏ.ஆர். ரகுமான் தனது இசைப்பயணத்தை இளையராஜாவிடம் இருந்து மேற்கொண்டார். 

ஆரம்ப காலங்களில் இசையை படிப்படியாக கற்றுக்கொண்ட இசைப்புயல் பின்னாளில் தனக்கென தனியொரு பாணியை உருவாக்கி இசைப்புயலாக உருவெடுத்தார். கம்பன் வீட்டில் இருக்கும் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதனைப்போல, இளையராஜாவிடம் இசைபயின்ற ஏ.ஆர் ரகுமானும் இசையின் நாயகனாக இருக்கிறார். 

AR Rahman

இசைஞானியும் - இளையராஜாவும் அவரவரின் பணிகளின் காரணமாக நேரில் சந்தித்துக்கொள்வது தற்போது கடினம் ஆகிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா சென்று திரும்பிய இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் சென்னைக்கு வர ஒருசேர சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.