செம மாஸ் தகவல்.. விஜய்க்கு எழுதிய கதையை பிரபல தமிழ் ஹீரோவிடம் கூறிய முருகதாஸ்.. அவரும் ஓகே சொல்லிட்டாராமே?

நடிகர் விஜய்க்காக எழுதிய கதையை வேறொரு பிரபல நடிகரிடம் கூறி இயக்குனர் முருகதாஸ் ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், AR முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் விஜய்யின் 65 வது படம் தயாராக இருப்பதாகவும், அதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
ஆனால் ஒருசில காரணங்களால் இந்த கூட்டணி விலகிவிட்டநிலையில் அதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ தகவல்களும் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் விஜய்க்காக எழுதிய அந்த கதையை முருகதாஸ் தற்போது சிவகாத்திகேயனிடம் கூறியிருப்பதாகவும், சிவகார்த்திகேயனுக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், பட வேலைகள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரியில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.