சினிமா

தான் இயக்காத ஒரு படத்தில் நடித்துள்ளார் AR முருகதாஸ்! எந்த படம் தெரியுமா?

Summary:

AR murugadhas act in abbas movie

தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அஜித்திற்கு தல என்ற பெயரை வாங்கி தந்ததே முருகதாஸ் இயக்கிய தீனா என்ற திரைப்படம்தான்.

விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு, விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என பிரமாண்ட படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

சிலகாலமாக சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் முருகதாஸ். கத்தி படத்தின் கதை என்னுடையது என்று துணை இயக்குனர் ஒருவர் போர் கொடி தூக்க, சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று மற்றொரு இயக்குனர் கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். பெரும்பாலும் தான் இயக்கும் படங்களில் ஒருசில காட்சிகளிலாவது தனது முகத்தை காட்டிவிடுவார் முருகதாஸ். ஆனால் இவர் இயக்காத படம் ஒன்றில், ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் முருகதாஸ்.

நடிகர் அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பூச்சூடவா’ என்று படத்தில் நடிகர் மணிவண்ணனுடன் ஒரு சிறு காமெடி காட்சியில் நடித்திருப்பார் முருகதாஸ்.


Advertisement