யோகி பாபுவுக்கு போட்டியாக ஹீரோவாக களமிறங்கும் மற்றொரு காமெடி நடிகர்!!

யோகி பாபுவுக்கு போட்டியாக ஹீரோவாக களமிறங்கும் மற்றொரு காமெடி நடிகர்!!



appukutty returns as hero

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகும் நடிகர்களில் பலர் பிற்காலத்தில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கிவிடுகின்றனர். 

இந்த வரிசையில் வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து யோகிபாபு 'கூர்க்கா' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

tamil cinema

இந்நிலையில் காமெடி நடிகரான அப்புக்குட்டி, 'வாழ்க விவசாயி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

அப்புக்குட்டி ஏற்கனே அழகர் சாமியின் குதிரை என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கினார்.அதன் பின்பு மன்னாரு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் காமெடியனாக நடித்தார்.



 

இந்நிலையில் மீண்டும் ஹீரோவா நடிக்கும் அப்புக்குட்டி இதனை பற்றி கூறுகையில், இந்த படத்தில் கதை தான் ஹீரோ. நான் ஹீரோ இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். போராட்டம் நிறைந்த ஒரு விவசாயிக்காக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.