BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்ன.. சூரரை போற்று ஹீரோயினா இது! வெயிட் போட்டு இப்படி கொழுக் மொழுக்கென மாறிட்டாரே!! ஷாக்கான ரசிகர்கள்!!
சூரரை போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி உடல் எடை அதிகரித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்க, நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி என்பவர் நடித்திருந்தார்.
இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அபர்ணாவின் கட்டியிழுக்கும் காந்த பார்வை, கெத்தான நடிப்பு, பேச்சு அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அபர்ணா பாலமுரளி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரது தந்தை பாலமுரளி ஒரு இசையமைப்பாளர், தாயார் ஷோபனா பின்னணி பாடகி.

மேலும் இவர் தமிழில் தீதும் நன்றே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 8 தோட்டாக்கள், சர்வ தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தில் சிக்கென அழகு சிலையாக இருந்த அவர் தற்போது உடல் எடை அதிகரித்து கொழுக் மொழுக்கென மாறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

