தீபாவளி விளக்கு போல் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் புகைப்படம்..

தீபாவளி விளக்கு போல் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் புகைப்படம்..



anupama-paremeshwaran-glamour-photos

தமிழ் திரைதுறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மலையாளத்தில் முதன் முதலில் 'பிரேமம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Malayalam

முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் வெற்றி அடைய விட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் இப்படத்திற்கு பின்பு பெரிதளவில் தமிழ் மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தற்போது தெலுங்கு மொழி சினிமாக்களில் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

Malayalam

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அனுபமா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தீபாவளியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபாவளி விளக்கு போல் மின்னுறீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.