சினிமா

என்னது? நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவரா? பொங்கும் நெட்டிசன்கள்!

Summary:

Anu keerthivaas joining with actor prasanth

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இவருக்குக்கு ஜோடியாக நடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருந்த பிரசாந்த் சமீப காலமாக தோல்வியையே தழுவி வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் அடுத்ததாக அவருடைய தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் 'சேலஞ்ஜ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏற்கனவே பிரசாந்தை வைத்து 'சாக்லேட்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் நாயகி யார் என்பதுதான். இந்த படத்தில், நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக கடந்த வருடம் இந்திய அழகி பட்டத்தை தட்டி சென்ற திருச்சியை சேர்ந்த அனுகீர்த்திவாஸ் தான் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாராம்.

https://cdn.tamilspark.com/media/180803zq-miss-india-2018-anukreethy-vas.jpg


Advertisement