சினிமா

அட.. அதுக்குள்ளேயுமா! வரும் பொங்கலுக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா? டிஆர்பி சும்மா எகிற போகுதே!!

Summary:

அட.. அதுக்குள்ளேயுமா! வரும் பொங்கலுக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா? டிஆர்பி சும்மா எகிற போகுதே!!

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவின் போது மக்கள் உற்சாகமாக பொழுது போக்கும் வகையிலும், டிஆர்பி யை அதிகரிக்க வைக்கும் வகையிலும் தொலைக்காட்சிகளில் ரிலீசான புது புது படங்கள் ஒளிபரப்பாகும்.  

இந்த நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பொங்கலன்று சன் டிவியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அண்ணாத்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது திரைக்கு வந்து சில மாதங்களே ஆன குடும்ப, செண்டிமெண்ட் திரைப்படமான அண்ணாத்த வரும் ஜனவரி 14ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணியளவில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகவுள்ளது. இதனை சன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Advertisement