சினிமா

குணமாதானே பார்த்துருக்க.. கோபப்பட்டு பார்த்ததில்லையே! எதிர்பார்ப்பை எகிற வைத்து, தெறிக்கவிடும் அண்ணாத்த டீசர்!!

Summary:

குணமாதானே பார்த்துருக்க.. கோபப்பட்டு பார்த்ததில்லையே! சும்மா தெறிக்கவிடும் அண்ணாத்த டீசர்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று மாலை அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த டீசரில் நடிகர் ரஜினி வேட்டி சட்டையுடன், முறுக்கு மீசையுடன் கிராமத்து லுக்கில் உள்ளார். மேலும் அதில் இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் அதில் பின்னணி இசையும் தெறிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... என்ற வசனம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.


Advertisement