அடஅட.. வேற லெவல்! 6 மாதங்களுக்குப் பிறகு அண்ணாத்த படைத்த சாதனை! செம ஹேப்பியில் முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!!annathe-sara-katre-song-crossed-20-million-views

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் சிவா இயக்கியுள்ளார்.

குடும்ப, அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையமாக கொண்ட அந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தாலும், 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அண்ணாத்த படத்தில் டி இமான் இசையில் வெளிவந்த சார சார காற்றே பாடல் 20 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி. இமான் உற்சாகத்துடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.