இதை செய்தால் நீங்களும் சூப்பர் ஸ்டார் தான்.! அனல் பறக்கும் நயன்தாரா பட டிரைலர்.!

இதை செய்தால் நீங்களும் சூப்பர் ஸ்டார் தான்.! அனல் பறக்கும் நயன்தாரா பட டிரைலர்.!



annapoorani-movie-trailer

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், பல காலமாக இருந்து வந்த பல்வேறு தடைகள் உடைக்கப்பட்டிருக்கின்றது. எப்போதும் கதாநாயகனை மையமாகக் கொண்டுதான் படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கடந்த 10 வருடங்களாக கதாநாயகிகளை மையமாக வைத்து மட்டுமே திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. அந்த விதத்தில், ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே, ராட்சசி, அமலாபால் நடிப்பில் வெளியான கடாவர், ஆடை, நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, அறம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

Nayandhara

அந்த வரிசையில், தற்போது நயன்தாரா கதாநாயகியாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் அன்னபூரணி. இந்தியாவின் மிகச்சிறந்த சமையல் கலைஞராக ஜொலிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு பெண் தன்னுடைய லட்சியத்தை அடைந்தாரா? என்பது தான் இந்த திரைப்படத்தின் கதையாக உள்ளதாம்.

நயன்தாராவுடன் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலைஞர் போட்டியில் பங்கேற்றுக் கொள்ளும் அன்னபூரணி, தடைகளை கடந்து அந்த போட்டியில் வெற்றியடைந்தாரா? என்பதை சுருக்கமான முறையில் தெரிவித்திருக்கிறது அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர்.

Nayandhara

அதேபோல இந்த திரைப்படத்தின் டிரைலரில் பஸ் நடத்துனராக இருந்த ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதற்காக லட்சம் நடத்துனர்களும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. அதே போல தான் அனைவரும் இந்தியாவின் தி பெஸ்ட் செஃப் ஆகிவிட முடியாது என்ற வசனத்திற்கு, இந்த திரைப்படத்தின் கதாநாயகி நயன்தாரா, புடிச்சத பன்னுனா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் தான் என்று தெரிவித்து, இலட்சியத்தை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஊக்கத்தை வழங்கியுள்ளார். அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலரே முழு திரைப்படத்தையும் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்த திரைப்படம்  டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கிறது என்று இந்த திரைப்படத்தின் டிரைலரிலேயே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எல்லோரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.