நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் எப்படி இருக்கு.?

நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் எப்படி இருக்கு.?



Annapoorani movie review

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் 75வது திரைப்படமான அன்னபூரணி நேற்றைய தினம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது.

அதேநேரம், இந்த அன்னபூரணி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதாக சமூக ஊடக விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். முன்னனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், கதாநாயகிகளை மட்டுமே மையமாகக் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார் நயன்தாரா. அந்த விதத்தில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது.

Nayandhara

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

நயன்தாரா நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் பற்றி நயன்தாராவின் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Nayandhara

இந்த திரைப்படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிகவும் சிறப்பாக இருப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் கதை ரசிகர்கள் யூகிக்க கூடிய அளவிற்கு எளிமையான கதையாக இருக்கிறது. இதன் காரணமாக, பெரிய அளவில் த்ரில்லிங் தன்மை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இயக்குனரின் ஸ்டைலான மேக்கிங் திரைப்படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறது. இருந்தாலு,ம் இயக்குனர் திரைக்கதையில் ஈர்க்க தவறிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இசையமைப்பாளர் தமன் அந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் என்று கூறப்படுகின்றது..

நயன்தாரா இத்திரைப்படத்தில் ஒரு பிராமண பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக பேசும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் ரசிக்குமளவுக்கு அமைத்திருக்கிறார்கள். சத்யராஜ், ஜெய், அச்யுத் குமார் உள்ளிட்டோர் அவர்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது. அதேநேரம் நயன்தாராவிற்கு இந்த திரைப்படம் மற்றுமொரு வெற்றி திரைப்படமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.