சினிமா

லவ் ப்ரொபோஸ் செய்த பையனுக்காக அஞ்சலி முதன்முதலாக செய்த காரியம்.! அவரே போட்டுடைத்த இரகசியம்!!

Summary:

anjali tie rocky to love propose boy

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அதனை தொடர்ந்து அவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெய்யுடன் இணைந்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

anjali க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு ஆந்திரா சினிமாவில் நடித்த அவர்  தற்போது மீண்டும் தமிழில் களமிறங்கியுள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அஞ்சலியிடம் காதல் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த பையன் ஒருவன் லவ் ப்ரொபோஸ் செய்ததாக கூறியுள்ளார்.

anjali க்கான பட முடிவு

மேலும் அந்த பையன் நான் உனக்கு ப்ரொபோஸ் செய்தால் உன்னால் என்ன பண்ண முடியும் எனவும் சவால் விடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி ராக்கி ஒன்றை வாங்கி அந்த பையனின் கையில் கட்டி சகோதரர் என கூறியுள்ளார். இதனை மிகவும் கலகலப்பாக அஞ்சலி பேட்டியில் கூறியுள்ளார்.
 


Advertisement