
சினிமா துறையில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்வது, பெண்களை
சினிமா துறையில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்வது, பெண்களை ஏமாற்றுவது என தொடர்ந்து பல ஆசாமிகளும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில் பலர் ஏமாந்தாலும் சிலர் தங்களது சாமர்த்தியத்தால் அதிலிருந்து எஸ்கேப் ஆகி பிறருக்கும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் அனிதா சம்பத் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் தைரியமாக அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் நபர் ஒருவர் பட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டுமெனவும் இளம்பெண் ஒருவருக்கு மோசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை அந்த இளம்பெண் அனிதாவிற்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிய நிலையில் அதனைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் இதுபோன்ற மோசடி நபர்களை யாரும் நம்பாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Advertisement
Advertisement